Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பள்ளி‌க‌ளி‌ல் க‌ட்டாய யோகா பயிற்சி : அன்புமணி!

பள்ளி‌க‌ளி‌ல் க‌ட்டாய யோகா பயிற்சி : அன்புமணி!
, ஞாயிறு, 30 நவம்பர் 2008 (03:32 IST)
நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் போன்ற தீவிர நோய்களால் பாதிக்கப்படுவதை தடுக்க அனைத்து பள்ளிக் குழந்தைகளுக்கும் யோகாசன பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாமத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அன்புமணி தெரிவி‌த்து‌ள்ளார்.

சென்னையில் உலக நீரிழிவு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த தென்கிழக்கு ஆசிய மண்டல நாடுகளுக்கு இடையேயான நீரிழிவு நோய் குறித்த மாநாட்டில் பேசுகையில் அவ‌ர் இதைத் தெரிவித்தார்.

மேலு‌ம், "இந்தியாவில் நீரிழிவு நோய் சிகிச்சைகளுக்கான திட்டங்களுக்கு உலக நீரிழிவு நோய் அமைப்பு நிதியுதவி அளித்து வருகிறது. இந்தியாவில் அதிகரித்து வரும் தீராத நோய்களை குணப்படுத்த வேண்டிய அவசியம் தற்போது ஒரு சவாலாகவே இருந்து வருகிறது. இதை நாம் தவிர்த்துவிட முடியாது. இதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மத்திய அரசு பல்வேறு சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வை மக்களிடையே உருவாக்க கொள்கை அளவில் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. ஏழை மற்றும் கல்வியறிவு இல்லாத மக்களிடையே இதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஒரு சவாலாக உள்ளது.

சிறு வயதிலேயே நீரிழிவு நோயால் சிலர் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு இன்சூலின் மருந்து தொடர்ந்து அளிக்கப்படுவதால் நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படுகிறது. இதற்காக நாள் ஒன்றுக்கு ரூ.4 முதல் ரூ.5 வரை செலவாகிறது. பெரியவர்கள் சில மருந்துகளுடன் சேர்த்து இன்சூலின் எடுத்துக் கொள்ள ரூ.20 முதல் ரூ.50 வரை செலவிடுகின்றனர்.

2007ஆ‌ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலகிலேயே இந்தியாவில்தான் அதிகளவாக 4 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2025ஆ‌ம் ஆண்டில் இது 7 கோடியாக அதிகரிக்கும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வின்படி கிராமப் பகுதிகளில் 3.8 ‌‌விழு‌க்கா‌ட்டினரு‌ம், நகர்ப்புறங்களில் 11.8 ‌‌விழு‌க்கா‌ட்டினரு‌ம் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 20 முதல் 79 வயது வரை உள்ள இந்தியர்களில் 9.7 ‌விழு‌க்காடு ஆண்களும், 15.5 பெண்களும் நீரிழிவு நோயால் உயிரிழக்கின்றனர்.

இந்தியாவில் நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் புற்று நோய் போன்றவற்றால் பெரும்பாலான மக்கள் உயிரிழக்கின்றனர். இதுபோன்ற நோய்களை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் மத்திய சுகாதார அமைச்சகம் தேசிய திட்டமொன்றை இந்த ஆண்டு துவக்கியுள்ளது. இதற்காக ரூ.1,650 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் போன்ற தீவிர நோய்களால் பாதிக்கப்படுவதை தடுக்க அனைத்து பள்ளிக் குழந்தைகளுக்கும் யோகாசன பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது பள்ளிக் குழந்தைகளுக்கும் மட்டுமல்ல அனைவரும் யோகாசன பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் இந்நோய்களின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வதுடன் தொடர்ந்து நோயின் தாக்கத்தை குறைத்து கொள்ளவும் முடியும்" எ‌ன்றஅன்புமணி தெரிவித்தார்.


Share this Story:

Follow Webdunia tamil