குடிநீரில் மழை நீர் கலந்திருந்தால் குடிநீர் தேவைக்கு குடிநீர் வாரியப் பகுதிப் பொறியாளர்களை தொடர்பு கொண்டு லாரி மூலமாக குடிநீரை பெற்றுக்கொள்ளலாம் என்று சென்னை பெருநகர குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்று வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து சென்னை பெருநகர குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்று வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னைக் குடிநீர் வாரியம் பொது மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட நல்ல குடிநீரே வழங்கி வருகின்றது. இருப்பினும் கடந்த சில தினங்களாக அதிக அளவில் மழை பெய்து வருவதால் பொது மக்கள் குடிநீரைக் காய்ச்சிக் குடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் வீடுகளில் உள்ள கீழ்நிலைத் தொட்டியில் மழைநீர் உட்புகுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. எனவே சென்னைக் குடிநீர் வாரியம் லாரிகள் மூலம் தேவைப்படும் இடங்களுக்குக் குடிநீர் விநியோகிக்க திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு குடிநீரில் மழை நீர் கலந்திருந்தால் குடிநீர் தேவைக்கு பின்வரும் தொலைபேசி, கைதொலைபேசி எண்களில் சென்னைக் குடிநீர் வாரியப் பகுதிப் பொறியாளர்களை தொடர்பு கொண்டு லாரிகள் மூலமாக குடிநீர் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு லாரிகள் மூலமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்தி வழங்கப்படும் குடிநீரைப் பொதுமக்கள் குடிப்பதற்கும் சமைப்பதற்கும் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பகுதி-1 25984647- 9445061901, பகுதி-2 25904310- 9445061902, பகுதி-3 25517814- 9445061903, பகுதி-4 26448346- 9445061904, பகுதி-5 26212101- 9445061905, பகுதி-6 24996796- 9445061906, பகுதி-7 28360175- 9445061907, பகுதி-8 28150059- 9445061908, பகுதி-9 23810969- 9445061909, பகுதி-10ஏ 24416341- 9445061910, பகுதி10பி 24451121- 9445061911, ஏயூஏ 26562458- 9445061600.