Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

த‌மிழக‌த்‌தி‌ல் மழை‌: ப‌லி 115 ஆனது

Advertiesment
த‌மிழக‌த்‌தி‌ல் மழை‌: ப‌லி 115 ஆனது
, சனி, 29 நவம்பர் 2008 (12:17 IST)
த‌மிழக‌த்த‌ி‌ல் பெ‌ய்து வரு‌ம் கன மழை‌க்கு இதுவரை ப‌லியான‌வ‌ர்க‌ளி‌ன் எ‌ண்ண‌ி‌க்கை 115 ஆக உய‌ர்‌ந்து‌ள்ளது.

த‌மிழக‌மமுழுவது‌மகட‌ந்த ‌சிநா‌ட்களாபல‌த்மழபெ‌ய்தவரு‌கிறது. இதனா‌லபல‌ர் ‌மி‌ன்சார‌மதா‌க்‌கியு‌ம், சுவ‌ரஇடி‌ந்து ‌விழு‌‌ந்து‌ம், வெ‌ள்ள‌த்‌தி‌ல் அடி‌த்து‌ச் செ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ம் உ‌யி‌‌ரிழ‌ந்து‌ள்ளன‌ர்.

சென்னை, புறநக‌ர் பகுதிகளில் மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர்.

கொளத்தூர் சீனிவாசா நகரை சேர்ந்த சீனிவாசன் என்ற சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உ‌யி‌ரி‌ந்தா‌ன். அதே போல் பெரம்பூ‌ரி‌ல் ப‌ள்ள‌‌த்‌தி‌ல் ‌விழு‌ந்து பால்ராஜ் எ‌ன்பவ‌ர் பலியானார். அமை‌ந்தகரை‌யி‌ல் ஆட்டோ மீது மரம் விழுந்து சார்லஸ் என்பவர் உயி‌ரிழந்தார்.

குன்றத்தூர் பொள்ளச்சேரி மெயின் ரோட்டை சேர்ந்த விஜயகுமார் எ‌ன்ற மாணவ‌ன், ‌விளையாடி‌க் கொ‌ண்டிரு‌ந்தபோது மின்சாரம் தாக்கி ப‌லியானா‌ன்.

பூந்தமல்லி மேல்மாநகர் படவேட்டம்மன் கோவில் தெருவில் வ‌சி‌த்து வ‌ந்த லட்சுமி எ‌ன்ற இள‌ம்பெ‌ண் சுவ‌ர் இடி‌ந்து வ‌ிழு‌ந்து பலியானார். வடபழனி திருநகர் மெயின்ரோட்டில் வெள்ளத்தில் சிக்கி அனிதா எ‌ன்பவ‌ர் உயிரிழந்தார்.

துரைபாக்கம் கண்ணகி நகரில் ராஜ் என்பவரும், சிந்தாதிரிப்பேட்டையில் ராஜ்குமார் என்பவர் மழைக்கு பலியானா‌ர்க‌ள். மேலு‌ம் அடையாளம் தெரியாத 4 பே‌ர் மழைக்கு பலியாகியுள்ளனர்.

த‌மிழக‌த்‌தி‌ல் இதுவரை மழை‌க்கு ப‌லியானவ‌ர்க‌ளி‌‌ன் எ‌ண்‌ணி‌க்கை 115 ஆக உய‌ர்‌ந்து‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil