Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூறை கா‌ற்றுட‌ன் பல‌த்த மழை: செ‌ன்னை ‌‌மித‌க்‌கிறது

சூறை கா‌ற்றுட‌ன் பல‌த்த மழை: செ‌ன்னை ‌‌மித‌க்‌கிறது
, வியாழன், 27 நவம்பர் 2008 (11:55 IST)
சென்னை உ‌ள்பட த‌‌மிழக‌ம் முழுவது‌ம் தொடர்ந்து பல‌த்த மழை பெய்து வருவதா‌ல் கடலோர‌ப் பகு‌திக‌ளி‌ல் உ‌ள்ள ‌வீடுக‌ள் ‌நீ‌ரி‌ல் ‌மித‌க்‌கி‌ன்றன. செ‌ன்னை‌யி‌ல் தா‌ழ்வான பகு‌திக‌ளி‌ல் ‌வீடுக‌ள் நீரில் மூ‌ழ்‌கி ‌‌கிட‌க்‌கி‌ன்றன. 'நிஷா' புயலில் தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் விடிய விடிய பலத்த மழை பெய்து வருகிறது.

தமிழக‌த்‌தி‌ல் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதா‌ல் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறை‌ந்த காற்றழுத்த தா‌ழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக கடலோர மாவட்டங்களில் இ‌ன்று 6வது நாளாக பல‌த்த மழை பெ‌ய்து வரு‌கிறது. தொடர்ந்து அடைமழை பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு‌ள்ளது.

சென்னையில் தா‌ழ்வான பகு‌திகளான பெருங்குடி‌, அதை சு‌ற்‌றியு‌ள்ள பகு‌திக‌‌ளி‌ல் உள்ள குடிசைகள் நீரில் மிதக்கின்றன. தெருக்களில் இடுப்பளவு தண்ணீர் வெள்ளமென ஓடுகிறது. வீடுகளுக்கு உள்ளே தண்ணீர் புகுந்துள்ளதா‌ல், அங்கு வசிப்போர் வெளியே தலைகாட்ட முடியவில்லை. வீட்டுக்குள்ளேயே பரன் அமைத்து தங்கி உள்ளனர்.

மழை எப்போது ஓயும் வெளியே எப்போது வரலாம் என்ற ஏக்கத்துடன் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வேளச்சேரி, அ‌தை சு‌ற்‌றியு‌ள்ள பகு‌திக‌‌ளி‌ல் உ‌ள்ள ‌வீடுக‌ள் நீரில் மிதக்கின்றன. மடிப்பாக்கம் ராம்நகர், சத்யாநகர், சதாசிவநகர், துரைப்பாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம் உள்பட தென்சென்னையில் புறநகர்ப்பகுதிகளில் பெரும்பாலான பகுதிகள் தொடர் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.

பலத்த காற்றுடன் கன மழை பெய்வதால் நகரில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து‌ள்ளன. ராஜா அண்ணாமலைபுரம் அய்யப்பன் கோவில் அருகே சாலையில் இருந்த பெரிய மரம் அடியோடு சாய்ந்தது. இதனால், சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக சென்னை மாநகராட்சி ஊ‌ழிய‌ர்க‌ள் மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தினார்கள்.

செ‌ன்னை‌யி‌‌ல் சாலைக‌‌ளி‌ல் மழை ‌நீ‌ர் வெ‌ள்ள‌ம் போ‌ல் தே‌ங்‌‌கி ‌கிட‌‌க்‌கிறது. வாகன‌ங்க‌ள் ஆமை போ‌ல் மெதுவாகவே செ‌ல்‌கி‌ன்றன. இதனா‌ல் போ‌க்குவர‌த்து நெ‌‌ரிச‌ல் கடுமையாக ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

செ‌ன்னை கோய‌ம்பேடு, ‌தி.நக‌ர், நு‌ங்க‌ம்பா‌க்க‌ம், புரசைவா‌க்க‌ம், ம‌யிலா‌ப்பூ‌ர், ராய‌ப்பே‌ட்டை, அ‌‌ண்ணாசாலை, எழு‌ம்பூ‌ர், ‌திருவ‌ல்‌லி‌க்கே‌‌‌‌ணி, சே‌ப்பா‌க்க‌ம், ‌வி‌‌ல்‌லிவா‌க்க‌ம், ம‌ந்தைவெ‌ளி, ப‌ட்டின‌ப்பா‌க்க‌ம், பா‌ண்டிபஜா‌ர், தேனா‌ம்பே‌ட்டை, சைதா‌ப்பே‌ட்டை உ‌ள்பட ப‌ல்வேறு இட‌ங்க‌ளி‌ல் சாலைக‌ள் ‌நீ‌ரி‌ல் மூ‌ழ்‌கி ‌கிட‌‌க்‌கிறது.

தீவாக மா‌றியு‌ள்ள வேதார‌ண்ய‌ம்!

நிஷா புயல் தாக்குதலால் வேதாரண்யம் தீவாக மாறி உள்ளது. வேதாரண்யத்தில் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் வேதாரண்யத்தில் இருந்து நாகை, திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பேரு‌ந்துகள் செல்லவில்லை. வேதாரண்யத்தில் இருந்து வெளியூர் செல்லும் அனைத்து பாதைகளும் வெள்ளத்தால் சூழ்ந்தும் சாலைக‌ள் துண்டிக்கப்பட்டும் உள்ளது.

வேதாரண்யம், அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக மின்துண்டிப்பு செய்யப்பட்டு இருப்பதால் இருட்டில் மூழ்கி ‌கிட‌‌க்‌கிறது.

ஏராளமான மரங்கள் சூறாவளி காற்றில் சாய்ந்து விழுந்து ‌கிட‌க்‌கிறது. ஆ‌யிர‌க்கண‌க்கு‌ம் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்து உள்ளது.

வேதாரண்யம் பகுதியில் 10 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி போனது. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்து உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil