கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் அ.இ.அ.தி.மு.க. பொதுசெயலர் ஜெயலலிதாவை சந்தித்தார்.
இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ``இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன், அ.தி.மு.க. பொதுசெயலர் ஜெயலலிதாவை நேற்று அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசினார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ கூட்டம் 28, 29 தேதிகளில் நடைபெறுவதாகவும், அந்த கூட்டம் முடிந்த பிறகு அக்கட்சியின் பொதுசெயலாளர் பிரகாஷ்கரத், 1ஆம் தேதி சென்னை வந்து கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் அப்போது ஜெயலலிதாவிடம் தா.பாண்டியன் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணி குறித்துப் பேசுவதற்காக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் ஏ.பி.பரதன், அ.இ.அ.தி.மு.க. பொதுசெயலர் ஜெயலலிதாவை கடந்த வாரம் சந்தித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.