வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியை சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.
1991-96ஆம் ஆண்டு காலத்தில் அமைச்சராக இந்திரகுமாரி மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1 கோடியே 97 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை சேர்த்ததாக குற்றம் சாட்டி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ஊழல் வழக்கு பதிவு செய்தனர். .
மேலும், இவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது சட்ட ஆலோசகர் பாபு, ஓட்டுனர் ஜீவா, உதவியாளர் துளசி ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு 4 பேர் மீதும், ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகிவற்றின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சடையாண்டி நேற்று தீர்ப்பளித்தார், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை தகுந்த ஆதாரத்தோடு நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதால், 4 பேரும் விடுதலை செய்யப்படுவதாக கூறி நீதிபதி உத்தரவிட்டார்.