பலத்த மழை காரணமாக, தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் நாளை நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
வங்கங்ககடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிழை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பலத்த மழை எச்சரிக்கை காரணமாக, பொறியியல் கல்லூரிகளில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு அடுத்த 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நாளை முதல் நடைபெற இருந்த பல்கலைக் கழகத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வுகள் நடைபெறுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.