வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் தென், வடக்கு கடலோர பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் 30 செ.மீ மழை பெய்துள்ளது.
அடுத்ததாக தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் தலா 25 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
பிற இடங்களில் பெய்த மழை அளவு செ.மீட்டரில் வருமாறு: ராமேஸ்வரம் 23, ஒரத்தநாடு 19, மயிலாடுதுறை 17, தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சன்வேதி 16, திருக்காட்டுப்பள்ளி, அய்யம்பேட்டை விராலிமலை, தங்கச்சிமடம், பாம்பன், திருமனூர் ஆகிய இடங்களில் தலா 15, திருவையாறு, புல்லம்பாடி தலா 14, கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர், லால்பேட்டை, வலங்கைமான், சீர்காழி தலா 13, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், ராமநாதபுரம் தலா 12.
கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம் புடலூர், காட்டுமன்னார்கோவில், கொடவாசல், புதுக்கோட்டை மாவட்டம் உடையாள்பட்டி, காட்டுமாவடி, கள்ளக்குடி தலா 11, கல்லணை, கீழ் அணை, மஞ்சலூர், சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, மணல்மேடு, புதுக்கோட்டை மாவட்டம் கரையூர், மணல்மேல்குடி, அருப்புக்கோட்டை தலா 10.
புவனகிரி, திருச்சி தலா 9, காரைக்கால், நன்னிலம், தரங்கம்பாடி, வேதாரண்யம், லால்குடி தலா 8, கடலூர், விழுப்புரம், திருவாரூர், திருத்துறைபூண்டி, நாகப்பட்டினம், பொன்னமராவதி, திருவாடனை, தொண்டி, அரியலூர், ஜெயம்கொண்டம், மணப்பாறை ஆகிய இடங்களில் தலா 7.
திருக்கோவிலூர், வானூர், அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, நீடாமங்கலம், திருமயம் ஆகிய இடங்களில் தலா 6, ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், பட்டுக்கோட்டை, வல்லம், கந்தார்வகோட்டை, கடலாடி, மணிமுத்தாறு, திருபுவனம், கொடைக்கானல், நத்தம் ஆகிய இடங்களில் தலா 5.