Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பர‌ங்‌கி‌ப்பே‌ட்டை‌யி‌ல் 15 செ.‌மீ மழை!

பர‌ங்‌கி‌ப்பே‌ட்டை‌யி‌ல் 15 செ.‌மீ மழை!
, திங்கள், 24 நவம்பர் 2008 (17:40 IST)
த‌மிழக‌‌த்த‌ி‌ல் நே‌ற்று ஆ‌ங்கா‌ங்கே பல இட‌‌ங்க‌ளி‌ல் பல‌த்த மழை பெ‌ய்து‌ள்ளது. கடலூ‌‌ர் மாவ‌ட்ட‌ம் பர‌ங்‌கி‌பே‌ட்டை, தொழுதூ‌‌ரி‌ல் தலா 15 செ.‌மீ மழை பெ‌ய்து‌ள்ளது.

அடு‌த்ததாக கடலூ‌ர் மா‌வ‌ட்ட‌ம் சே‌த்‌தியா‌த்தோ‌ப்பு, ‌விரு‌த்தாசல‌ம், புவன‌‌கி‌ரி, கு‌ப்பாந‌‌த்த‌ம், ‌விழு‌ப்புர‌ம் மாவ‌ட்ட‌ம் க‌ள்ள‌க்குற‌ி‌ச்‌சி ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் தலா 13 செ.‌மீ மழை பெ‌ய்து‌ள்ளது.

கடலூ‌‌‌ர் மாவ‌ட்ட‌ம் கொ‌த்தவா‌ச்சே‌ரி, கா‌ட்டும‌யிலூ‌ர், அ‌ண்ணாமலை நக‌ர், த‌‌ஞ்சை மாவ‌ட்‌ட‌ம் ‌கீ‌‌ழ்அணை, நாக‌ப்ப‌ட்டின‌ம் மா‌வ‌ட்ட‌ம் மண‌ல்மேடு, ‌சீ‌‌ர்கா‌ழி, ம‌யிலாடுதுறை, ராமநாதபுர‌ம் ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் தலா 11 செ.‌மீ மழை பெ‌ய்து‌ள்ளது.

கடலூ‌ரமாவ‌ட்ட‌ம் ‌சித‌ம்பர‌ம், புது‌க்கோ‌ட்டை மாவ‌ட்ட‌ம் கா‌ட்டுமாவடி, ராமே‌‌ஸ்வர‌ம், அ‌ரியலூ‌ர் ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் தலா 10 செ.‌மீ மழை பெ‌ய்து‌ள்ளது.

கடலூ‌ர், புது‌‌ச்சே‌ரி ‌விமான ‌நிலைய‌ம், அ‌திரா‌ம்ப‌ட்டின‌ம், ‌திரு‌விடைமருதூ‌ர், வல‌ங்கைமா‌ன், ‌விரா‌‌லிமலை, சேல‌ம் மாவ‌ட்ட‌ம் ஆ‌த்தூ‌ர், ஜெய‌ம்கொ‌ண்ட‌‌ம் ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் தலா 9 செ.‌மீ மழை ப‌திவா‌கியு‌ள்ளது.

ப‌ண்ரு‌ட்டி, த‌‌ஞ்சாவூ‌ர், கு‌ம்பகோண‌ம், தொ‌ண்டி, ‌திருநெ‌ல்வே‌லி மாவ‌ட்ட‌ம் ஆ‌ய‌க்குடி, ‌பெர‌ம்பலூ‌ர் மாவ‌ட்ட‌ம் ‌திருமனூ‌ர் ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் தலா 8 செ.‌மீ மழை பெ‌ய்து‌ள்ளது.

கா‌ட்டும‌ன்னா‌ர்கோ‌வி‌ல், ‌விழு‌ப்புர‌ம், காரை‌க்கா‌ல், ‌திரு‌க்கா‌ட்டு‌ப்ப‌ள்‌ளி, ‌திரு‌த்துறைபூ‌ண்டி, தூ‌த்து‌க்குடி மாவ‌ட்ட‌ம் காய‌ல்ப‌ட்டின‌ம், ம‌ணியா‌‌‌ச்‌சி, அரு‌ப்பு‌க்கோ‌ட்டை ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் தலா 7 செ.‌மீ மழை ப‌திவா‌கியு‌ள்ளது.

அடு‌த்இர‌ண்டு நா‌ட்க‌ளி‌ல் செ‌ன்னை, ‌திருவ‌ள்ளூ‌ர், கா‌‌ஞ்‌சிபுர‌ம், கடலூ‌ர், ‌விழு‌ப்புர‌ம், த‌‌ஞ்சாவூ‌ர், ‌திருவாரூ‌ர், நாக‌ப்ப‌ட்டின‌ம், புது‌க்கோ‌ட்டை, ராமநாதபுர‌ம், தூ‌த்து‌க்குடி, ‌திருநெ‌ல்வே‌லி, க‌ன்‌னியாகும‌ரி ம‌ற்று‌ம் புது‌ச்சே‌ரி‌யி‌ல் ‌மிதமான மழை முத‌ல் பல‌த்த மழை பெ‌ய்ய‌க் கூடு‌ம் எ‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

அடு‌த்த 48 ம‌ணி நேர‌த்‌தி‌ல் த‌மிழ‌கத்த‌ி‌‌ல் கடலோர‌ப் பகு‌தி ம‌ற்று‌ம் புது‌ச்சே‌ரி‌யி‌ல் ஆ‌ங்கா‌ங்கே பல‌த்த மழை பெ‌ய்யு‌ம் எ‌ன்று‌ம் வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil