Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேசிய பொருளாதார நிலை குறித்து வெள்ளை அறிக்கை : ஜெயலலிதா!

தேசிய பொருளாதார நிலை குறித்து வெள்ளை அறிக்கை : ஜெயலலிதா!
சர்வதேச பொருளாதாரச் சரிவை முன்கூட்டியே அறிந்து அதனை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு ஏன் எடுக்கவில்லை எ‌‌ன்று கே‌ள்‌வி எழு‌ப்‌‌பியு‌ள்ள அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா, தேசிய பொருளாதார மேலாண்மைக் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நுகர்வோரின் வாங்கும் ச‌க்தியை அதிகரிக்க தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விலையைக் குறைக்குமாறு நிதியமைச்சர் சிதம்பரம் தொழில் துறையினரை கேட்டுக் கொண்டார். தொய்வடைந்துள்ள இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை நிமிர்த்த விலைக் குறைப்பு என்ற யோசனை பயன்படாது. தொழில் துறையினரும் இந்த யோசனையை நிராகரித்து விட்டனர்.

பணப்புழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ரிசர்வ் வங்கி மற்றும் பிற வங்கிகள் சட்டப்படி வைத்திருக்க வேண்டிய தொகையை குறைக்கும்படி செய்தது இந்தியாவிலிருந்து எளிதாக பணத்தை எடுத்துச் செல்ல வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உதவியது.

இந்த நடவடிக்கையால் இந்திய பொருளாதாரத்திற்கு எவ்வித பலனும் ஏற்படவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஒட்டு மொத்த பொருளாதார மேலாண்மை மீது நமது தேசம் நம்பிக்கையை இழந்துவிட்டது. சரிந்து கொண்டிருக்கும் பங்குச் சந்தையைத் தூக்கி நிறுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தன்னாட்சி அமைப்புகளான செபி மற்றும் பாரத ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் செய‌ல்பாடுகளில் சிதம்பரம் தலையிடுகிறார்.

இருப்பினும் பங்கு‌ச் சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் குறைந்து கொண்டே வருகிறது. கட்டமைப்பு வளர்ச்சியும், தொழில் உற்பத்தியும் முடங்கிவிட்டன.

சர்வதேச பொருளாதாரச் சரிவு குறித்து முன்கூட்டியே கணித்து அதனை எதிர்கொள்ள நம்மை ஏன் தயார்படுத்திக் கொள்ளவில்லை? பதுக்கி வைக்கப்பட்ட பொருட்களை வெளியில் கொண்டு வருவதற்கோ, விலைவாசியைக் குறைப்பதற்கோ மத்திய, மாநில அரசுகள் எவ்வித முயற்சியையும் எடுக்கவில்லை. நாட்டின் மோசமான பொருளாதார மேலாண்மை அனைவரையும் கவலைக் கொள்ள வைத்துள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தை நிலைகுலைய வைக்கும் உலகளவிலான சதித்திட்டத்தின் ஒரு பகுதிதா‌ன் இந்த மோசமான மேலாண்மை என்று கருதுகிறேன். சர்வதேச பொருளாதாரச் சரிவை முன்கூட்டியே அறிந்து அதனை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு ஏன் எடுக்கவில்லை.

உலகப் பொருளாதாரம் சீர் குலைந்து நிலையற்றதாக இருக்கும்போது உலகப்பொருளாதாரத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமரும், நிதியமைச்சரும் தொடர்ந்து வலியுறுத்துவது ஏன்? மத்திய அரசு பங்குச் சந்தையில் ஏன் விடாப்பிடியாக கவனம் செலுத்தி வருகிறது? இது போன்ற விவரங்களை உள்ளடக்கிய தேசிய பொருளாதாரத்தின் மேலாண்மை குறித்து ஒட்டுமொத்த வெள்ளை அறிக்கையை மத்திய அரசு அளிக்க வேண்டும்'' எ‌ன்று ஜெயலலிதா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil