Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அகதிகளை இலங்கைக்கு அனுப்ப அரசு முயற்சி - தா. பாண்டியன்!

Advertiesment
அகதிகளை இலங்கைக்கு அனுப்ப அரசு முயற்சி - தா. பாண்டியன்!
, ஞாயிறு, 23 நவம்பர் 2008 (05:46 IST)
இலங்கையில் இருந்து வந்து தமிழ்நாட்டில் அகதிகளாக குடியேறியுள்ள இலங்கைத் தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் செல்லுமாறு அரசு வலியுறுத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா. பாண்டியன் குற்றம் சாற்றியுள்ளார்!

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யக் கோரி வேலூரில் வேலூ‌ர் தமிழ்ச் சங்கம் சார்பில் அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு தா. பாண்டியன் பேசுகை‌யி‌ல்,

இலங்கையில் இருந்து அகதிகளாக கடந்த 20 ஆண்டுகளாக சுமார் 4.5 லட்சம் இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் குடியயேறியுள்ளனர். இவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப முயற்சி நடக்கிறது.

இலங்கையில் அமைதி திரும்புவதாகவும், அகதிகள் தங்குவதற்கான அனுமதிக்காலம் முடிந்துவிட்டதாகவும் கூறி கடந்த 3 நாட்களுக்கு முன் ஒவ்வொரு அகதிக்கும் மத்திய அரசு எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ளது.

இந்தக் கடிதம் தமிழில் எழுதப்பட்டுள்ளதால், தமிழக அரசுக்கு தெரியாமல் இது நடந்திருக்காது. இந்த திட்டத்தை கைவிடக்கோரி முதல்வருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.

மேலு‌ம், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்றும், இலங்கை அரசுடன் தமிழர் பிரதிநிதிகளை பேச வைக்க வேண்டும் என்றும், இதற்காக ஒருமித்த கருத்தோடு மத்திய அரசை நாம் வலியுறுத்த வேண்டும் என்றும் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil