Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதாவுடன் ஏ.பி. பரதன் சந்திப்பு! கூ‌ட்ட‌ணி கு‌றி‌த்து பே‌ச்சுவா‌ர்‌த்தை!

ஜெயலலிதாவுடன் ஏ.பி. பரதன் சந்திப்பு! கூ‌ட்ட‌ணி கு‌றி‌த்து பே‌ச்சுவா‌ர்‌த்தை!
, வியாழன், 20 நவம்பர் 2008 (09:39 IST)
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதாவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயல‌ர் ஏ.பி. பரதன் சந்தித்துப் பேசினார்.

போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் நடந்த இச்சந்திப்பின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய துணைச் செயலர் சுதாகர் ரெட்டி, மாநில செயல‌ர் தா. பாண்டியனும் உடனிருந்தனர்.

இச்சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஏ.பி. பரதனிடம், கூட்டணி குறித்து பேசினீர்களா என்று கேட்டதற்கு, "பேசினோம். அதற்காகத்தான் எங்களை ஜெயலலிதா அழைத்திருந்தார். கூட்டணி அமைக்க விருப்பமில்லாமல் எங்களை அவர் ஏன் அழைக்க வேண்டும்" என்றார்.

"ஜெயலலிதாவுடனான சந்திப்பு குறித்து பிரகாஷ் காரத்திடம் எடுத்துக் கூறுவேன். ஜெயலலிதாவை சந்திப்பது குறித்து ஏற்கனவே பிரகாஷ் காரத்திடம் தெரிவித்துள்ளேன், வரும் மக்களவைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுடனான கூட்டணி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் க‌ட்சியின் உயர்மட்டக் குழு கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்படும்" என்றும் ஏ.பி. பரதன் கூறினார்.

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரசுடனும், பாஜகவுடனும் கூட்டணி இல்லை என்று ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் தி.மு.க. உள்ளதால், தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க.வுடன் மார்க்சிஸ்ட் கட்சி கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil