சிறிலங்க கடற்படையினரால் நேற்று சிறை பிடிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாப் பட்டணத்தைச் சேர்ந்த மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ஜ.க. அகில இந்திய செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திருநாவுக்கரசர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தந்தி அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர், பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு தந்தி அனுப்பியுள்ளார்.
அதில், "புதுக்கோட்டை மாவட்டம் ஜகதா பட்டணத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.