சென்னை அரசு பொது மருத்துவமனையின் நரம்பியல் பிரிவு கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
6 மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் கீழ் தளத்தில் உள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை வார்டில் பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டு சாதனம் திடீரென வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நோயாளிகளும், நரம்பியல் பொதுப் பிரிவில் இருந்த நோயாளிகளும் உடனடியாக வெளியேறற்ப்பட்டனர்.
தீ விபத்து ஏற்பட்டதையடுத்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 20 நிமிடத்திற்குள் தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்போ, உயிர் இழப்போ ஏற்படவில்லை.