Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோவை செல்லும் ரயில்களில் மாற்றம்!

கோவை செல்லும் ரயில்களில் மாற்றம்!
, செவ்வாய், 18 நவம்பர் 2008 (11:02 IST)
கோவையில் யார்டை நவீனப்படுத்தும் பணி நடைபெறுவதால் சென்னை சென்டிரலிலஇருந்தகோவை வழியாக செல்லும் அனைத்து மெயில் மற்றும் ‌விரைவு ரயில்களும் வரு‌ம் 25ஆ‌ம் தேதி முதல் டிசம்பர் 12ஆ‌ம் தேதி வரை கோவை செல்லாது எ‌ன்று தெற்கு ரயில்வே அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கோவையில் யார்டை நவீனப்படுத்தும் பணி நடைபெறுவதால், சென்டிரல்-கோவை இடையே ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அத‌ன்படி, தற்போது கோவை வழியாக செல்லும் அனைத்து மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் வருகிற 25ஆ‌ம் தேதி முதல் டிசம்பர் 12ஆ‌ம் தேதி வரை கோவை செல்லாது. அதற்கு பதிலாக அந்த ரயில்கள் அனைத்தும் இருகூர் வழியாக திருப்பி விடப்பட்டு பாடனூரில் நிற்கும்.

சென்னை சென்டிரல்-கோவை இன்டர் சிட்டி ‌விரைவு ரயில் 26, 29 மற்றும் டிசம்பர் 2,5,8,11 ஆகிய தேதிகளில் கோவை வரை செல்வதற்கு பதிலாக ஈரோட்டில் நிறுத்தப்படும்.

இதேபோல், சென்டிரல் வழியாக கோவை செல்லும் ஜெய்ப்பூர்-கோவை ‌விரைவு ரயில் 28 மற்றும் டிசம்பர் 5, 12 ஆகிய தேதிகளில் கோவை செல்லாமல் ஈரோட்டி‌‌ல் நிறுத்தப்படும்.

சென்னை சென்டிரல்-மேட்டுப்பாளையம் நீலகிரி ‌விரைவு ரயில்களின் கோவை பகுதிகளுக்கான பெட்டிகள் 25ஆ‌ம் தேதி முதல் டிசம்பர் 12ஆ‌ம் தேதி வரை கோவை வடக்கு பகுதியிலே துண்டிக்கப்படும். மேட்டுப்பாளையம் செல்லக்கூடிய பெட்டிகள், மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் சென்னை சென்டிரலில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் வாராந்திர ‌விரைவு ரயில் 29ஆ‌ம் தேதி, டிசம்பர் 6, 13 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படும். இதேபோல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோவையில் இருந்து சென்னை சென்டிரலுக்கு இயக்கப்படும் வாராந்திர ‌விரைவு ரயில் நவ‌ம்ப‌ர் 28 டிசம்பர் 5, 12 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படும்.

சென்னை சென்டிரலில் இருந்து கோவை செல்லும் சேரன் ‌விரைவு ரயில்கள், கோவை ‌விரைவு ரயில்கள், கோவையில் இருந்து சென்டிரலுக்கு வரும் இன்டர்சிட்டி ‌விரைவு ரயில், லோக்மானியா திலக் ‌விரைவு ரயில், நாகர்கோவில் ‌விரைவு ரயில், ஜனசதாப்தி ‌விரைவு ரயில்க‌ள், நிஜாமுதீன்-கோவை கொங்கு ‌விரைவு ரயில்க‌ள், கோவை ராஜ்கோட் வாராந்திர ‌விரைவு ர‌யி‌ல் ஆகிய ரயில்களில் எவ்வித மாற்றமும் இல்லை.

மேலும் 25ஆ‌ம் தேதி முதல் டிசம்பர் 12ஆ‌ம் தேதி வரை மங்களூர்-கோவை பயணிகள் ரயில் கோவை வரை செல்வதற்கு பதிலாக பாடனூர் வரை தான் செல்லும். இதே போல் கோவையில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக பாடனூரில் இருந்து புறப்பட்டு செல்லும்.

சோரனூர்-கோவை-திருச்சூர் பயணிகள் ரயில் பாடனூரில் நிறுத்தப்படும். கோவை-பாலக்காடு டவுன்-கோவை பயணிகள் ரயில், கோவை-சோரனூர் பயணிகள் ரயில் போத்தனூரில் நிறுத்தப்படும். ஈரோடு-கோவை பயணிகள் ரயில் கோவை வடக்கு பகுதியில் நிறுத்தப்படும்.

கோவை-மங்களூர் (387, 388) பயணிகள் ரயில் பாடனூரில் நிறுத்தப்படும். திருச்சி-பாலக்காடு டவுன் பயணிகள் ரயில் இருகூரில் நிறுத்தப்படும்" எ‌ன்று கூறப‌ட்டு‌ள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil