சென்னையில் ரூ.2 கோடியே 95 லட்சத்து 27 ஆயிரம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 20 பூங்காங்களை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை மாநகராட்சி சார்பில் 20 புதிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. செனாய் நகரில் ரூ.1.52 கோடி செலவில் திரு.வி.க. பூங்கா மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 19 பூங்காக்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.
வார்டு-2இல் ஜவஹர் பூங்கா, அம்பேத்கார் பூங்கா, வாசுகி பூங்கா, வார்டு-13இல் மின்ட் மாடர்ன் சிட்டி பூங்கா, வார்டு-62இல் ஆர்.கே.சிண்டிகேட் நகர் பூங்கா, மஹாவீர் பூங்கா, செந்தில் நகர் பூங்கா, அஞ்சுகம் நகரில் 4 பூங்காக்கள், வார்டு-78இல் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை மற்றும் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை இடையில் சாலைத் தீவுப் பூங்கா.
வார்டு-71இல் பேங்க் மாணிக்கம் பூங்கா, வார்டு-65இல் கோயம்பேட்டில் உள்ள தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டு கிராமத்தில் திறந்தவெளிப் பூங்கா, வார்டு-104இல் மேயர் சத்தியமூர்த்தி பூங்கா.
வார்டு-106இல் மேயர் சுந்தரராவ் பூங்கா, வார்டு-149இல் தர்மாம்பாள் பூங்கா வார்டு-153இல் ஏ.ஜி.எஸ்.காலனி பூங்கா, வார்டு-142இல் கலைஞர் பூங்கா ஆகிய பூங்காக்களும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.
20 பூங்காக்களும் ரூ.2 கோடியே 95 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன. இதை அமைச்சர் ஆற்காடு வீராசாமி முன்னிலை வகிக்க, மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்து செனாய் நகரில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.