Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கரூ‌‌ரி‌ல் அ.இ.அ.தி.மு.க. நாளை ஆர்ப்பாட்ட‌ம் : ஜெயலலிதா அறிவிப்பு!

கரூ‌‌ரி‌ல் அ.இ.அ.தி.மு.க. நாளை ஆர்ப்பாட்ட‌ம் : ஜெயலலிதா அறிவிப்பு!
, திங்கள், 17 நவம்பர் 2008 (10:40 IST)
கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடு‌க்க வலியுறுத்தி அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை க‌ண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ‌க்‌க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகு‌றி‌த்து அவ‌ர் வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், "கரூர் மாவட்டம் லாலாப்பேட்டையில் அமைந்திருக்கும் ரயில்வே லெவல் கிராசிங்கால் கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை அறிந்து 1998ஆ‌ம் ஆண்டு அமைக்கப்பட்ட மத்திய அமை‌ச்சரவை‌யி‌ல் அ.தி.மு.க. பங்கேற்றபோது, லாலாப்பேட்டை ரயில்வே மேம்பாலம் அமைய நடவடிக்கை எடு‌க்க‌ப்ப‌ட்டது.

1998ஆ‌ம் ஆண்டே லாலாப்பேட்டை ரயில்வே மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக, லாலாப்பேட்டை ரயில்வே மேம்பாலப்பணிகளில் தொய்வு ஏற்பட ஆரம்பித்தது.

2006ஆ‌ம்ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், 18 மாதங்களில் இந்த மேம்பாலப்பணிகள் முடிவடையும் என்று தி.மு.க. மத்திய அமை‌ச்ச‌ர் டி.ஆர்.பாலு அறிவித்தார். அவரது கூற்றுப்படி, இந்த மேம்பால பணிகள் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை மேம்பாலப்பணிகள் முடிவடையவில்லை.

ரயில்வே பாதை மீதுள்ள பகுதியில் பாலம் கட்டுவதற்கு பாதுகாப்பு சான்றிதழை ரயில்வே நிர்வாகம் வழங்காததுதான் காலதாமதத்திற்கு காரணம் என்ற சாக்கு போக்கை அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். ரயில்வே அமை‌ச்சரை சந்தித்து பாதுகாப்பு சான்றிதழை உடனடியாக பெறுவதற்கு மத்திய அமை‌ச்ச‌ர் டி.ஆர்.பாலுவால் முடியாதா?

லாலாப்பேட்டை ரயில்வே கதவு மூடப்படும் போதெல்லாம் அப்பகுதி மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறார்கள். மேலும், அடிக்கடி ரயில்வேகேட் பழுதுபடுவதால் 3 மணி நேரம், 4 மணி நேரம் அளவுக்கு போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகிறது.

இதன்காரணமாக, பிரசவத்திற்கு செல்லும் தாய்மார்கள் மற்றும் அவசர நோயாளிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் படும் வேதனைகள் ஏராளம்.

எனவே, கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளாத தி.மு.க. மத்திய அமை‌ச்ச‌ர் டி.ஆர்.பாலுவை கண்டித்தும், பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் கரூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் 18ஆ‌ம் தேதி காலை 10 மணியளவில் கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை பேரு‌ந்து நிறுத்தம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil