நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுனாமி தாக்கப்போவதாக பரவிய எஸ்எம்எஸ் வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தம் காரணமாக நேற்று நாகை கடலில் கடல் கொந்தளிப்பு மிகக்கடுமையாக ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து நாகை மாவட்டத்தில் சுனாமி தாக்கப்போவதாக எஸ்எம்எஸ் மூலம் வதந்தி பரவியது.
நவம்பர் 15, 16 தேதிகளில் நாகையில் சுனாமி தாக்கும் என்றும், இதில் பாதிக்கும் மேற்பட்ட நாகை மாவட்டம் கடலில் மூழ்கிவிடும் என்றும் அந்த எஸ்எம்எஸ்சில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தகவலைப் பார்த்தவர்கள் பீதியடைந்தனர். என்றாலும், அந்த தகவல் வெறும் வதந்தி என்றும், சுனாமி ஆபத்து ஏதுமில்லை என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயராமன் விளக்கம் அளித்தார்.