சென்னை மாநகர காவல்துறை ஆணையராக கே. ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றார்.
சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரியில் இரு பிரிவு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயம் அடைந்தனர்.
மாணவர்களுக்கு இடையில் நடந்த இந்த மோதலைக் காவலர்கள் தடுக்காமல் வேடிக்கை பார்த்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர், இணை ஆணையர் (வடக்கு) ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து, சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் பொறுப்பில் இருந்து ஆர்.சேகர் இடம் மாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆணையராகத் தற்பொது குடிமைப் பொருள் வழங்குதுறை ஏ.டி.ஜி.பி. பதவியில் உள்ள கே.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.
அவர் இன்று பிற்பகலில் சென்னை மாநகர காவல்துறை ஆணையராக பதவி ஏற்றுக்கொண்டார்.