ஓட்டுனர் உரிமம் பெற நியமிக்கப்பட்டுள்ள குறைந்தப்பட்ச கல்வித் தகுதியை தளர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, ஓட்டுனர் உரிமம் பெற 8ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என்று உள்ள விதியை தளர்த்தும் எண்ணம் அரசுக்கு உள்ளதா என்று உறுப்பினர் விடியல் சேகர் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதில் அளித்த அமைச்சர் நேரு, ஓட்டுனர் உரிமம் பெற கல்வித்தகுதி கட்டாயம் தேவை என்றும் சிக்னலை கற்றுக்கொள்ள படிப்பு மிகவும் அவசியமாகிறது என்றும் கூறினார்.
வாகன ஓட்டுனர்கள் தமிழகத்தில் மட்டும் இல்லாமல், வெளிமாநிலங்களுக்கும் வாகனம் ஓட்டி செல்வதால் கல்வித்தகுதி அவசியம் தேவை என்று கூறிய அமைச்சர், இதை தளர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றார்.