சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள சட்டக்கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறையளிக்கப்பட்டு, தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களில் இரு பிரிவினர் நேற்று மோதிக்கொண்டதையடுத்து, இச்சம்பவத்தை வேடிக்கைப் பார்த்த காவல்துறையினரைக் கண்டித்து கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்லூரி ஜன்னல் கண்ணாடி, கதவுகளை அடித்து உடைத்தனர்.
இதையடுத்து, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, சட்டக்கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறையளிக்கப்படுவதாகவும், தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
சென்னை சட்டக்கல்லூரிக்கு காலவரையரையற்ற விடுமுறையளிக்கப்பட்டு விடுதியும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சட்டக்கல்லூரிகள் முன் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.