வங்க கடலின் தென்கிழக்கு பகுதியில் இலங்கைக்கும், தமிழகத்துக்கும் இடையே உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள இந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, இன்று நகரும் வாய்ப்பு உள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவை கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், மற்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளிலும் மழை பெய்யும்.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய பலத்த மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் 3.39 மி.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 2.50 மி.மீ. மழையும், அணண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 3.10மி.மீ.
மழையும் நேற்று பெய்துள்ளது.