மதிப்புக் கூட்டு வரி திருத்தச் சட்டம், உள்ளாட்சித் திருத்தச் சட்டம் உள்பட 8 மசோதாக்கல் தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சென்னை நகருக்கு அருகே புதிதாக புறநகர் காவல் ஆணையரகம் அமைத்தது உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.
இவற்றிற்கான சட்ட மசோதாக்கள் இன்று சட்டப்பேரவையில் அந்தந்த அமைச்சர்களால் தாக்கல் செய்யப்பட்டன. மதிப்புக்கூட்டு வரி திருத்தச் சட்டம், உள்ளாட்சி திருத்தச் சட்டம், தமிழக அரசு சம்பள திருத்தச் சட்டம் உள்பட 8 மசோதாக்கள் இதில் அடங்கும்.
இம்மசோதாக்கள் அனைத்தும் இந்த கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்பட உள்ளன.