காஞ்சீபுரம் நகர அ.இ.அ.தி.மு.க. செயலர் வி.ராஜேந்திரன் இன்று முதல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "காஞ்சீபுரம் மேற்கு மாவட்டம், காஞ்சீபுரம் நகர அ.தி.மு.க. செயலாளர் வி.ராஜேந்திரன் இன்று முதல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
காஞ்சீபுரம் மேற்கு நகர அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் புல்லட் பரிமளம் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் மண்டல அண்ணா தொழிற் சங்க செயலாளர் பொறுப்பில் இருக்கும் மு.செல்வராஜ் இன்று முதல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
அவருக்குப் பதிலாக கும்பகோணம் மண்டல அண்ணா தொழிற்சங்க செயலாளர் பொறுப்பில் டி.சக்திவேல் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
சேலம் புறநகர் மேற்கு மாவட்டம் மேச்சேரி பேரூராட்சி ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் இருக்கும் பி.மாணிக்கம் இன்று முதல் அந்த பொறுப் பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். மேச்சேரி ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் ஆர்.பாலசுப்பிரமணியம் நியமிக்கப்படுகிறார்.
சேலம் புறநகர் மேற்கு மாவட்ட பேரூராட்சி அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் பி.மாணிக்கம் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்" என்று கூறப்பட்டுள்ளது.