ஈரோடு: சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்ட பிறகுகூட ஜெயலலிதாவிற்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு அருகே உள்ள பவானியில் நகர அ.தி.மு.க. பொதுகூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.
அப்போது, தமிழகத்தில் 1991 ம் ஆண்டு முதல் 1996 ம் ஆண்டு வரை தீவிரவாதத்தை கட்டுப்படுத்தியவர் ஜெயலலிதா. பஞ்சாப், ஒரிசா, கர்நாடகா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடிய சமயத்தில் தமிழ்நாடு மட்டும் அமைதி பூங்காவாக காட்சியளித்தது. இதை உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ்பாட்டேல் கூறினார்.
ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் உத்திவிட்டபிறகு கூட ஜெயலலிதாவிற்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்று கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.