Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கை துப்பாக்கிச் சூடு: விசாரணை குழு!

Advertiesment
இலங்கை துப்பாக்கிச் சூடு: விசாரணை குழு!
, ஞாயிறு, 9 நவம்பர் 2008 (02:17 IST)
நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் குறித்து ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மீன்வளத் துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், கோடியக்கரையில் நேற்று முன்தினம் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததாக செய்திகள் வந்துள்ளதன் அடிப்படையில் இந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.

ஜெயராமனின் மகன் பாபு (வயது 30) என்பவர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றி விரிவான விசாரணைக்கு அரசு உத்தரவிட்டு உள்ளதாகவும், இதற்காக மீன்வளத் துறையின் இணை இயக்குனர் (மண்டலம்) ஆர். தில்லைகோவிந்தன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil