சென்னையை அடுத்த பரங்கிமலை உச்சியில் இருக்கும் புனித தோமையார் ஆலயத்தில் ஏசுநாதர் சிலர் மர்ம நபர்கள் சிலர் உடைத்துள்ளனர்.
ஆலயத்தின் அருகே ஏசுநாதர் கைகளை விரித்துக் கொண்டு நிற்பது போன்ற சிலை உள்ளது. இந்த சிலையின் மார்பு மற்றும் கை பகுதியை மர்ம ஆசாமிகள் உடைத்துள்ளனர்.
இதைப்பார்த்த ஆலய நிர்வாகிகள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். புறநகர் காவல்துறை ஆணையர் எஸ்.ஆர், ஜாங்கிட் உத்தரவின் பேரில் பரங்கிமலை காவல்துறையினர், சிலை உடைக்கப்பட்ட பகுதியை பார்த்தனர்.
சிலையை உடைத்தவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலயத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதேபோல், திண்டுக்கல்லில் தோமையார் புரத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில், 36 கல்லறைகளில் இருந்த சிலுவைகளை யாரோ அடித்து நொறுக்கி விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.