பாரத ரிசர்வ் வங்கியின் ஆளுநர் டி.சுப்பாராவ் கையெழுத்திட்ட புதிய பத்து ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட இருக்கிறது.
இதில் ஆளுநரின் கையெழுத்து மற்றும் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27இல் வெளியிடப்பட்ட புதிய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட மகாத்மா காந்தி நோட்டுகளின் வரிசை, 2005-ன் வடிவம் மற்றும் பிற அம்சங்கள் அனைத்தும் அப்படியே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதைத்தவிர வேறு எந்த புதிய மாற்றங்களும் இந்த நோட்டுகளில் இருக்காது என்றும் இதற்கு முன்னர் பாரத ரிசர்வ் வங்கி வெளியிட்ட அனைத்து 10 ரூபாய் நோட்டுகளும் சட்டப்படி தொடர்ந்து செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.