Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அந்தியூர் வனப்பகுதியில் பள்ளத்தில் விழுந்து ஆண்யானை சாவு

Advertiesment
அந்தியூர் வனப்பகுதியில் பள்ளத்தில் விழுந்து ஆண்யானை சாவு
ஈரோடு: அந்தியூர் வனப்பகுதியில் பள்ளத்தில் தவறி விழுந்த ஆண்யானை பரிதாபமாக இறந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் பர்கூர் வனப்பகுதியில் காட்டுயானைகள் அதிகமாக வசித்து வருகின்றது. இந்த யானைகள் அவ்வப்போது அருகில் இருக்கும் வனக்கிராமங்களின் ஓரத்தில் உள்ள விவசாய நிலத்தில் உணவு தேவி செல்வது வழக்கம்.

நேற்று மாலை அந்தியூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள கடையீரட்டி கிராமத்திற்கு அருகில் உள்ள விவசாய நிலத்தை தேடி முப்பது வயது மதிக்கதக்க ஆண்யானை ஒன்று வந்தது. அப்போது வனப்பகுதியை ஒட்டியுள்ள ஒரு பள்ளத்தில் இந்த யானை தவறி விழுந்தது. இதில் மார்பில் பலத்த அடி ஏற்பட்டு அந்த ஆண் யானை பரிதாபமாக இறந்தது.

தந்தம் வளர்ந்து காணப்பட்ட இந்த ஆண்யானையின் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இது குறித்து ஈரோடு மாவட்ட வனஅதிகாரி ஜெகநாதன், வனச்சரகர் ஞானசேகரன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil