Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை!

ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை!
, வெள்ளி, 7 நவம்பர் 2008 (04:34 IST)
விதிகளை மீறி செயல்படும் வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனரக ஓட்டுநர்கள் தங்களது உரிமங்களை புதுப்பிக்கும்போதும், உரிமத்தினை மேற்குறிப்பு செய்யும்போதும் ஒரு நாள் சிறப்பு பயிற்சியைப் பெற்றிருக்க வேண்டும். இதற்கென அங்கீகாரம் பெற்ற கனரக ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளித்து சான்றுகள் வழங்க வேண்டும். இதற்கான அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாநில் அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

வாகன பயிற்சிக்கு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள், சென்னை தரமணியில் உள்ள சாலைப் போக்குவரத்து நிறுவனம் பரிந்துரைத்ததன் அடிப்படையில் அதிகபட்சம் ரூ. 300 வசூலிக்கலாம் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறையின் சரக அலுவலர்கள் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள், பயிற்சி அளிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இதற்கும் குறைவான தொகையை நிர்ணயம் செய்து தர தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் சரியான முறையில் நிர்ணயிக்கப்பட்டபடி, ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி அளித்து சான்றுகள் வழங்கி வருகின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும். இது, கனரக ஓட்டுநர் உரிமதாரர்கள், கனரக வாகன பயிற்சி பள்ளி உரிமையாளர்களின் கவனத்துக்கு வெளியிடப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதை மீறும் பயிற்சிப் பள்ளிகள் தொடர்பாக புகார்கள் வரப்பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்ச தண்டனையாக, ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரசு எச்சரித்துள்ளத

Share this Story:

Follow Webdunia tamil