இலங்கையில் பாதிப்புக்குள்ளான தமிழ் மக்களுக்கு திரட்டப்பட்டு வரும் நிவாரண நிதி ரூ.9 கோடியை தாண்டி குவிந்துள்ளது.
முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளையேற்று இன்று நடிகர் கமல்ஹாசன் ரூ.5லட்சம், மெட்ராஸ் சிமெண்ட்ஸ் சார்பில் ரூ.15 லட்சம், நடிகர் விஷால் ரூ.3 லட்சம், பரத் ரூ.50 ஆயிரம், நகைச்சுவை நடிகர் கருணாஸ் ரூ.50 ஆயிரம், நாசர் ரூ.10 ஆயிரம், ஜீவா ரூ.1 லட்சம் வழங்கினர்.
மேலும், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், பாரதிதாசன் பல்கலைக் கழகம் சார்பில் தலா ரூ.10 லட்சம், வி.ஜி.பி. குழுமம் சார்பில் ரூ.3 லட்சம் உள்பட இதுவரை மொத்தம் 9 கோடியே 16 லட்சத்து 24 ஆயிரத்து 743 ரூபாய் நிதி குவிந்துள்ளதாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.