Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆங்கிலத்தில் பேரு‌ந்து டிக்கெட்: அ.இ.அ.‌தி.மு.க. நாளை ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்!

ஆங்கிலத்தில் பேரு‌ந்து டிக்கெட்: அ.இ.அ.‌தி.மு.க. நாளை ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்!
, வியாழன், 6 நவம்பர் 2008 (14:21 IST)
எதற்கெடுத்தாலும் அண்டை மாநிலத்தை சுட்டிக்காட்டி புள்ளி விவரங்களை அளிக்கும் கருணாநிதி, அரசு பேரு‌ந்துக‌ளி‌ல் தா‌‌ய்மொ‌ழி‌யி‌ல் டி‌க்கெ‌ட் கொடு‌‌ப்ப‌தி‌ல் ஏன் அண்டை மாநிலத்தைப் பின்பற்றவில்லை எ‌ன்று கே‌ள்‌வி எழு‌ப்‌‌பியு‌ள்ள அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா, அரசுப் பேருந்துகளில் பயணச் சீட்டுகள் இனி தமிழ் மொழியில் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை செ‌ன்னை‌யி‌ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று கூ‌றியு‌‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌‌யி‌‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் படிக்காதவர்களும், பாமரர்களும், தமிழ் மட்டுமே அறிந்தவர்களும் அதிகம் பயணிக்கின்றார்கள். அரசுப் பேருந்துகளில் தி.மு.க. அரசால் இயந்திரங்கள் மூலம் பயணிகளுக்கு விநியோகிக்கப்படும் பயணச் சீட்டுகள் தாய்மொழியாம் தமிழ்மொழியில் இல்லாமல் ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பது மிகுந்த வேதனையை அளிப்பதோடு மட்டும் அல்லாமல் கடும் கண்டனத்திற்குரியது.

தமிழ்மொழி, செம்மொழி என காகித வடிவில் வைத்துக்கொண்டால் போதாது. தமிழ்நாட்டையும் கடந்து தொன்மை வாய்ந்த நம் தமிழ் மொழி பரவ தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், தமிழ்மொழி ஆட்சிமொழியாக உருவாவதற்கான சூழ்நிலைகள் உருவாகும்.

அண்டை மாநிலமான கர்நாடகத்தில் அரசுப் பேருந்துகளில் வழங்கப்படும் பயணச் சீட்டு கன்னட மொழியில்தான் உள்ளது. எதற்கெடுத்தாலும் அண்டை மாநிலத்தை சுட்டிக்காட்டி புள்ளி விவரங்களை அளிக்கும் கருணாநிதி, இந்த விடயத்தில் ஏன் அண்டை மாநிலத்தைப் பின்பற்றவில்லை.

அரசுப் பேருந்துகளில் வழங்கப்படும் பயணச் சீட்டுகள் இனி தமிழ் மொழியில் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அ.இ.அ.தி.மு.க. வடசென்னை, தென் சென்னை மற்றும் காஞ்‌சிபுரம் கிழக்கு ஆகிய மாவட்டங்களின் இலக்கிய அணியின் சார்பில் நாளை (7ஆ‌ம் தே‌தி) காலை 10 மணி அளவில் சென்னை மாநகரப் போக்குவரத்து தலைமை அலுவலகமான பல்லவன் இல்லம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil