Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் பிரச்சனையில் சுதந்திரமாக செயல்பட வருக: கருணா‌நி‌தி அழை‌ப்பு!

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் பிரச்சனையில் சுதந்திரமாக செயல்பட வருக: கருணா‌நி‌தி அழை‌ப்பு!
, வியாழன், 6 நவம்பர் 2008 (16:42 IST)
இல‌ங்கை‌தத‌மிழ‌ரபிரச்சனையில் சுதந்திரமாக செயல்பட வருக வருக எ‌ன்றஅழை‌ப்பு ‌‌விடு‌த்து‌ள்முதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி, என்னைக் காட்டிலும் வீரமிக்க தமிழர்களை அழைப்பதோடு நான் ஒதுங்கி நின்றுவிடாமல்; அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று உறுதிய‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இததொட‌ர்பாமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி இ‌ன்றவெ‌ளி‌யி‌ட்டு‌ள்அ‌றி‌க்கை‌:

இலங்கையில் நடைபெறும் தமி‌இனப் படுகொலை, நாற்பது ஆண்டுககால வரலாற்றுக்குரிய தொடர் நிக‌ழ்ச்சியாகி விட்டது. அதைத் தடுத்து நிறுத்தித் தமிழர்க்கு உரிமை பெற்றுத் தர போர்க்கோலம் பூண்டவர்கள், பகைவர்கள் மீது பா‌ய்ந்திடாமல்; சகோதர யுத்தம் நடத்துவதிலேயும் அவற்றில் மாண்டு மடியும் தமது பழைய களத்தளபதிகளுக்கு சமாதிகள் அமைத்திடும் பணியிலேயும் காட்டிய விறுவிறுப்பை இன ஒற்றுமையில் காட்டத் தேவையில்லையென்றே கருதிச் செயல் பட்டு; தமது இனம் அறவே செத்து மடிவது குறித்து அக்கறையற்றே இருந்து விட்டனர்.

அதிர்ச்சிதரத் தக்கதும் - ஆறாத் துயரம் அடையத்தக்கதுமான நிக‌ழ்வுகள் இலங்கை மண்ணில் நித்யத் “திருவிழா”க்கள் ஆகி; இறுதிக் கட்டமாக அமைந்துள்ள இன்றுள்ள சோக நிலை; உலகத் தமிழர்கள் அனைவரும் அறிந்ததே ஆகும். இன்றைய நிலைக்கு முடிவு கண்டிட எடுத்திடும் முயற்சி என் ஒருவனால் மட்டுமே முற்றுப் பெறக்கூடியதல்ல! - இதை உணர்ந்திருப்போர் கூட நான் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திருப்பதால் என்னால் தனித்து நின்று வெற்றி பெற முடியும் என்று தவறாக எண்ணுகிறார்கள்; அல்லது தவறாகக் கூறுகிறார்க‌்.

“இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு - ஒருமைப்பாட்டுக்கு விரோதமாக - எதுவும் பேசுவோம் - எங்களுக்கு வேண்டியது இலங்கையில் தமி‌ஈழம் தான்” என்கிற அவர்களின் பேச்சும் எழுத்தும் எனக்குப் புரிகிறது. ஆனால் இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கிடையே அலை மோதும் எதிர் விமர்சனங்களையும் ஓர் அரசு; சிந்தித்துச் செயல்பட வேண்டியிருக்கிறதல்லவா? அவற்றை அலட்சியப்படுத்த முடியாதல்லவா? முதலில் அத்தகைய சட்டக் கட்டுப்பாடுகளை உடைக்கும் விதமாகப் பேசுகிறார்கள்!

தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் தந்திர‌ம்!

சட்ட ரீதியாக அதன் மீது நடவடிக்கை எடுத்திட நேர்ந்தால், “கருணாநிதி இலங்கைத் தமிழர்களுக்கெதிராக நடந்து கொள்கிறார் என்று “பெரும் பழி” சுமத்துகிறார்கள். சாதனைகள் புரியும் ஆட்சி என்பதற்குச் சான்றாக அமைந்துள்ள அடுக்கடுக்கான திட்டங்களும், அவற்றின் செயல்பாடுகளும் அவை தொடர்பான புள்ளி விபரங்களுமே போதுமானவை என்ற மனநிறைவு எனக்கிருந்தாலும்; எனக்கும், என் தலைமையில் உள்ள ஆட்சிக்கும் எப்படியோ ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்று தீர்மானித்து; எவையெவை
சட்ட விரோதமான செயல்களோ; அவற்றிலே ஈடுபட்டு தமிழக அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் தந்திரத்தைக் கையாண்டு வருகிறார்கள்.

ஒரு பக்கம் மேலும் முன்னேறு என்று முழக்கம் - மறு பக்கம் “போதும் திரும்பு” என்பது போல சைகைகள்- இந்நிலைக்கு, காரணம் என்ன? என்பதைச் சிந்தித்து கை பிசைந்து நிற்பதை விட, இந்தப் பிரச்சனையில் சுதந்திரமாக செயல்பட வருக வருக என்று என்னைக் காட்டிலும் வீரமிக்க தமிழர்களை அழைப்பதோடு நான் ஒதுங்கி நின்றுவிடாமல்; அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும் உறுதி கூறி - என்னுடனிருந்து துணை நிற்கும் தூய உடன்பிறப்புகள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.

இந்தியப் பேரரசு என் வேண்டுகோளையும் அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டத்து தீர்மானங்களையும் படிப்படியாக நிறைவேற்ற முனைந்ததற்காக - சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கும் - இலங்கைத் தமிழர்க்கு மருந்து, உணவு, உடை இவற்றை செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. அமைப்பு போன்றவற்றின் மூலம் வழங்கிட இதுவரை எட்டு கோடி ரூபா‌அளவுக்கு நிதி வழங்கிய தமிழகப் பெரு மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் வழங்கிட வேண்டுகிறேன். நான் தெரிவித்துள்ள இந்தக் கருத்துகள் ; இலங்கைத் தமிழர்களின் காயத்திற்கும் - இங்குள்ள சில தலைவர்களின் எரிச்சலுக்கும் - தக்க சிகிச்சைக்கான மருந்தாகட்டும். அவர்களின் நலிவு தீர்த்திட ஒருவகையில் நாம் பயன்படுகிறோம் என்ற மன நிறைவுடன் என்றும் போல் தமி‌‌ழ்த்தொண்டு - தமிழினத் தொண்டு தொடர்வோம்.

இ‌வ்வாறகருணா‌நி‌தி தனதஅ‌றி‌க்கை‌யி‌லகூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil