இன்று நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைவர் கே.வி.தங்கபாலு அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நவம்பர் 6ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வேறு தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் மத்திய அமைச்சர் வயலார் ரவி 6ஆம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அவசியம் கலந்து கொள்ள வேண்டி உள்ளதால் சென்னை வருகை வேறு தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்று தங்கபாலு கூறியுள்ளார்.