Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலவச வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெ‌ட்டி : 15 ‌நிறுவன‌ங்க‌ளு‌க்கு ஒ‌ப்புத‌ல்!

இலவச வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெ‌ட்டி : 15 ‌நிறுவன‌ங்க‌ளு‌க்கு ஒ‌ப்புத‌ல்!
, புதன், 5 நவம்பர் 2008 (15:50 IST)
த‌மிழக‌த்‌தி‌லவழ‌ங்க‌ப்ப‌ட்டவரு‌மஇலவவ‌ண்ண‌ததொலை‌க்கா‌ட்‌சி‌‌பப‌ெ‌ட்டி‌யி‌ன் 4-வதக‌ட்டமாக 41,62,500 இலவவ‌ண்ண‌ததொலை‌க்கா‌ட்‌சி பெ‌ட்டிகளவழ‌ங்க 15 நிறுவனங்களிடமிருந்தகொள்முதல் செ‌ய்திட முத‌ல்வ‌ரகருணா‌நி‌தி தலைமையிலான சட்டமன்றக் கட்சிகளின் பிரநிதிகள் குழு ஒப்புதல் அ‌‌ளி‌த்து‌ள்ளது.

செ‌ன்னை தலைமைச் செயலகத்தில் முத‌ல்வ‌ரகருணா‌நி‌தி தலைமையிலான சட்டமன்றக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு கூ‌ட்ட‌ம் இ‌ன்றநடைபெ‌ற்றது. இதில், உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின், டி.சுதர்சனம் (காங்கிரஸ்), கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), வை. சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்), ஹெச். அப்துல் பாசித் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), மு.ஜெகன்மூர்த்தி (புரட்சி பாரதம்), து.ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்) ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்குழு கூட்டத்தில் ஒரு வண்ணத் தொலைக்காட்சி பெட்டியின் விலை ரூ.2,321 என்ற அடிப்படையில் பீ.ஜீ. இன்டர்நேஷனல் நிறுவனத்திடமிருந்து 5 லட்சம் தொலைக் காட்சிப் பெட்டிகளும், க்ளியர் விஷன் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடமிருந்து 1 லட்சம் தொலைக்காட்சிப் பெட்டிக‌ளு‌ம் கொ‌ள்முத‌ல் செ‌ய்ய‌ப்பட உ‌ள்ளன.

மேலு‌ம், கெவின் இன்போடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 75,000மு‌ம், சலோரா இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 1 லட்சம், சன்டெக் விஷன் நிறுவனத்திடமிருந்து 50,000‌ம், டொங்குவான் யாங்கு எலக்ட்ரானிக்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 1,87,500‌ம், வீடியோகான் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 5 லட்ச‌ம், டிக்சன் டெக்னாலஜிஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 5 லட்ச‌ம் தொலைக்காட்சிப் பெட்டிகளும் கொ‌ள்முத‌ல் செ‌ய்ய‌ப்பட உ‌ள்ளன.

இதேபோ‌ல், ஏர்விஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 5 லட்ச‌ம், கிச்சன் அப்ளையன்சஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 2 லட்ச‌ம், ஜீனஸ் எலக்ட்ரோடெக் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 2,50,000‌ம், ஈஸ்ட் இந்தியா டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 5 லட்ச‌ம், பெல்டெக் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 4,00,000‌ம், டிரென்ட் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 2,00,000‌ம், மல்கோத்ரா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 1,00,000 தொலைக்காட்சிப் பெட்டிகளும் கொ‌ள்முத‌லசெ‌ய்ய‌ப்பஉ‌ள்ளன‌.

4ஆ‌மக‌ட்ட‌த்‌தி‌ல் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டத்திற்காக மொத்தம் 41,62,500 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செ‌ய்வதெஒருமனதாக முடிவு செ‌ய்யப்பட்டுள்ளது எ‌ன்றத‌மிழஅரசவெ‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌க்கு‌‌றி‌ப்‌பி‌லகூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil