இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து தென்னிந்திய திரைப்பட சம்மேளன தொழிலாளர்கள் (பெப்சி) இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டூடியோவில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 வரை நடந்தது.
உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பெப்சி தலைவர் விஜயன் தலைமை தாங்கினார். தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம.நாராயணன் தொடங்கி வைத்தார். பெப்சி யூனியனில் உள்ள அனைத்து சங்கங்களை சேர்ந்தவர்களும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரத பந்தலில் 21ம் நூற்றாண்டின் ஹிட்லர், இடியமின், ராஜபக்சே, சென்னீரில் ஈழம் கண்ணீரில் தமிழினம், வெட்ட வெட்ட தளிர்க்கும், அருகம்புல், கொல்ல கொல்ல பிறக்கும் தமிழினம், மத்திய அரசே தலையிட்டு போரை நிறுத்து என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பேனர்கள் தொங்க விடப்பட்டிருந்தன.
ஈழத்தமிழர் பிணங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பது போன்ற டிஜிட்டல் பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன.
இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்தும், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் விளம்பர பதாகைகள் பந்தலில் வைக்கப்பட்டிருந்தது.
உண்ணாவிரதத்தை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் பங்கேற்று முடித்து வைத்தார்.