இலங்கைத் தமிழர் படுகொலையை கண்டித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்!
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி!
இலங்கைத் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து சத்தியமங்கலம் நீதிமன்றத்திற்கு முன் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
இலங்கையில் சிங்க இராணுவத்தினர் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து இலங்கைத் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்தும் சத்தியமங்கலம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் இருந்தனர்.
சத்தியமங்கலத்தில் உள்ள நடுவர் நீதிமன்ற கட்டட வளாகத்திற்கு முன்பு நடந்த வழக்கறிஞர்கள் உண்ணாவிரத்ததால் நீதிமன்றத்தில் வழக்கு பணிகள் முடங்கியது.