Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒன்றுபட்டா‌ல் பலன்: கி.வீரமணி!

Advertiesment
ஒன்றுபட்டா‌ல் பலன்: கி.வீரமணி!
, புதன், 5 நவம்பர் 2008 (14:42 IST)
''இலங்கை பிரச்சனையில் ஒன்றுபட்டு குரல் கொடுத்தால் பலன் கிடைக்கும்'' எ‌ன்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இததொட‌ர்பாஅவ‌ரவெ‌ளி‌யி‌ட்டு‌ள்அறிக்கையில், ''தமிழ் இன உணர்வோடும், மனித நேயத்தோடும் உதவிட நிதி, நிவாரணப் பொருட்கள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வின் வெளிப்பாடாக உலகிற்கு காட்ட நிதிதிரட்டி பொருள்களை அங்கே அனுப்பும் நிலை முதலமைச்சர் கருணாநிதி முயற்சியால் உருவாகியுள்ளது. சர்வதேச செஞ்சிலுவை சங்கம், ஐ.நா.சபை மூலம் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு கிடைக்கச் செய்யப்படும் ஒரு சிறந்த ஏற்பாடு.

இந்த பிரச்சனையில் ஒன்றுபட்டு நிற்க முனையாமல், ''கட்டிய வீட்டுக்கு குறை கூறுவதுபோல'' அறிக்கை விடுவதால் என்ன உருப்படியான பலன் ஏற்படும் என்பதை சிந்திக்க வேண்டும்.

தீயை அணைக்க வேண்டிய நேரத்தில் அதில் பெட்ரோலை ஊற்றுவது போல் நடந்து கொள்ளலாமா? ஒன்றுபட்ட குரல் கிளம்பினால், அடுத்த நிமிடமே மத்திய அரசு, ராஜபக்சேவுக்கு ஆணையிடாது இருக்குமா? எ‌ன்று ‌வீரம‌ணி கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil