Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம்!

துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம்!
, புதன், 5 நவம்பர் 2008 (02:00 IST)
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே கல்வீச்சின் போது, காவல்துறையின் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் உயிரிழந்த சுரேஷின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க முதல் அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

பேரையூர் வட்டம் இடகோட்டைப்பட்டியில் நேற்று காலை நடைபெற்ற ஒரு சம்பவத்தின்போது கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் கருப்பையா என்பவரின் மகன் சுரேஷ், உயிரிழந்ததாக கிடைத்த செய்தியை அறிந்து முதல்வர் கருணாநிதி வேதனை அடைந்ததுடன், அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததாகவும், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாய் உதவி வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் மாநில் அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர்/உட்கோட்ட நீதிபதி அளவில் நீதிவிசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil