விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மங்களூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் செல்வப் பெருந்தகை. தற்போது அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
என்றாலும் தனது ராஜினாமாவுக்கான காரணத்தை வரும் வியாழனன்று தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
இதுபற்றி செல்வப்பெருந்தகை அளித்த பேட்டியில், தனது ராஜினாமா கடிதத்தை வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரின் போது சட்டப்பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பனிடம் அளிக்க உள்ளதாகத் தெரிவித்தார்.
தன்னை நம்பி வாக்களித்த கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதி மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், ராஜினாமாவுக்கான காரணம் என்ன என்பது குறித்த தன்னிலை விளக்க கூட்டத்தை திட்டக்குடியில் வியாழனன்று மாலை நடத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதில் பங்கேற்கும்படி ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஒன்றிய குழு தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், வார்டு குழு தலைவர்கள், முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு தாம் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.