மின் நிலவரம் குறித்து திண்டுக்கல் பகுதி நூற்பாலை உரிமையாளர்களுடன் மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தியில், தற்போதைய மின் நிலவரம் குறித்து மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் திண்டுக்கல் பகுதி நூற்பாலை உரிமையாளர்களுடன் சங்கத்தினருடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் மச்சேந்திரநாதன், மின்வாரிய செயல் இயக்குனர் சிவதாஸ் மீனா, மின்பகிர்மான உறுப்பினர் குணசேகரன், மின் உற்பத்தி உறுப்பினர் பாலசுப்பிரமணியன் ஆகியோரும் உடனிருந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.