மதுரை அருகே புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் கார் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து மதுரையில் இன்று அரசு பேருந்து ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டது.
மதுரை ஆரப்பாளையத்தில் இரண்டு பேருந்துகளையும், கொட்டாம்பட்டியில் ஐந்து பேருந்துகளையும் மர்ம நபர்கள் இன்று கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.
ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு அரசு பேருந்து ஒன்றுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு ஓடிவிட்டனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 3 பேரை கைது செய்தனர்.
இதனிடையே, கிருஷ்ணசாமியின் கார் தாக்குதல் நடத்தப்பட்ட எழுமலைக்கு இன்றும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.