Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திம்பம் மலைப்பாதையில் கிரைனைட் பாறை அகற்றம்!

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

திம்பம் மலைப்பாதையில் கிரைனைட் பாறை அகற்றம்!
, செவ்வாய், 4 நவம்பர் 2008 (10:22 IST)
திம்பம் மலைப்பாதையில் 15 வது கொண்டைஊசி வளைவில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் லாரியில் இருந்து விழுந்து போக்குவரத்து இடையூறு ஏற்படுத்திய கிரைனைட் பாறை கிரைன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.

webdunia photoWD
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ளது திம்பம் மலைப்பகுதி. பண்ணாரியில் இருந்து திம்பம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை மொத்தம் 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். இதில் ஆறு, எட்டு, பதினைந்து, இருபது, மற்றும் இருபத்தி ஏழு உள்ளிட்ட கொண்டை ஊசி வளைவுகள் குறுகியுள்ளதால் இவைகள் ஆபத்தான வளைவுகளாக கருதப்படுகிறது.

இந்த கொண்டை ஊசி வளைவுகளில் பலமுறை பாரம் ஏற்றிவரும் லாரிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. லாரிகள் கவிழும் சமயத்தில் பத்து மணி நேரத்திற்கு மேல் இங்கு போக்குவரத்து தடை ஏற்படுகிறது. இந்த நேரத்தில் பேரு‌ந்து பயணிகள் தண்ணீர் மற்றும் உணவின்றி தவிக்கும் சூழலும் ஏற்படுகிறது.

இதை தடுக்க போக்குவரத்து‌த்துறை எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதற்கு தீர்வு தமிழ்நாடு, கர்நாடகா எல்லையில் வாகன எடைமேடை அமைத்து அதிக பாரம் ஏற்றிவரும் லாரிகளை அங்கேயே தடுத்து நிறுத்தினால் மட்டுமே இந்த நிலை மாறும்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகரில் இருந்து சேலத்திற்கு ஏற்றிவந்த மெகா கிரைனைட் பாறை பதினைந்தாவது கொண்டைஊசி வளைவில் கவிழ்ந்தது. இதனால் போக்குவரத்து தடை ஏற்பட்டது. பின் ஓரளவு சரிசெய்து போக்குவரத்து சீர்செய்தனர்.

இந்த கிரைனைட் பாறையை நேற்று கிரைன் வைத்து அகற்றினர். இதனால் அவ்வப்போது திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து தடை ஏற்பட்டது. இருந்தபோதிலும் போக்குவரத்து பாதிக்காதவகையில் தாளவாடி காவ‌ல்துறை ஆ‌ய்வாள‌ர் சௌந்திரராஜன், ஆசனூர் உத‌வி ஆ‌ய்வாள‌ர்க‌ள் மாரிச்சாமி, சண்முகம் உள்ளிட்டோர் போக்குவரத்தை சீர்செய்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil