இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசைக் கண்டித்து, ம.தி.மு.க. சார்பில் வரும் 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை ஒருவாரம் போராட்டம் நடத்தப்படுகிறது.
இது தொடர்பாக ம.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈழத் தமிழர்களை படுகொலை செய்து வரும் சிங்கள அரசுக்கு ரேடார், ராணுவம் உள்பட அனைத்து உதவிகளையும் செய்து வரும் மத்திய அரசை கண்டித்து ம.தி.மு.க. சார்பில் வருகிற 12-11-2008 முதல் 18-11-2008 வரை கண்டன வாரம் கடைப்பிடிக்கப்படும்.
அதன்படி, 12ஆம் தேதி கோவை, கோவை மாநகர், நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல் ஆகிய இடங்களில் உண்ணாவிரதம் அல்லது பொதுக்கூட்டம் நடைபெறும். இதேபோல், 13ஆம் தேதி திருச்சி, திருச்சி மாநகர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, பெரம்பலூரிலும், 14ஆம் தேதி கடலூர், விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு, திருவண்ணாமலை, புதுச்சேரி ஆகிய இடங்களில் உண்ணாவிரதம் அல்லது பொதுக்கூட்டம் நடைபெறும்.
15ஆம் தேதி மதுரை, மதுரை மாநகர், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய இடத்திலும், 16ஆம் தேதி திருநெல்வேலி, திருநெல்வேலி மாநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இடங்களிலும், 17ஆம் தேதி காஞ்சீபுரம், திருவள்ளூரிலும், 18ஆம் தேதி வடசென்னை, தென்சென்னையிலும் உண்ணாவிரதம் அல்லது பொதுக்கூட்டம் நடைபெறும்" என்று கூறப்பட்டுள்ளது.