சென்னையில் இரண்டு உதவி காவல்துறை ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவல்லிக்கேணி துணை ஆணையர் எஸ்.லட்சுமி, லஞ்ச ஒழிப்பு பிரிவு மத்திய சரக கண்காணிப்பாளராக (சென்னை) மாற்றப்பட்டு உள்ளார்.
இதுவரை லஞ்ச ஒழிப்புப் பிரிவு மத்திய சரக கண்காணிப்பாளராகப் பணியாற்றிய என்.இசட். ஆசியம்மாள், சென்னை பூக்கடை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
பூக்கடை துணை ஆணையர் பதவியில் இருந்த எஸ்.வி. கருப்பசாமி சிறப்பு அதிரடிப்படை கண்காணிப்பாளராக ஈரோட்டுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
மதுரையில் போலீஸ் தலைமையக துணை ஆணையர் ஜெ.ரவீந்திரன், சென்னை போலீஸ் தலைமையக உதவி ஐ.ஜி.யாக மாற்றப்பட்டதாக 17.10.08 அன்று பிறப்பிக்கப்பட்டு இருந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு அவர் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். அ