சந்தனக் கட்டைகளை கடத்த முயன்றதாகக் கூறி சென்னையில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை அடையாறு திரு.வி.க. பாலம் அருகே உள்ள பிரம்ம ஞான சபையில் உள்ள சந்தன மரங்களை வெட்டி சிலர் கடத்துவதாக காவல்துறையினருக்கு புகார் வந்தது.
இதுபற்றி தீவிர விசாரணை நடத்தி, சேலம் மாவட்டம் நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமசாமி (36), மணி குண்டம் சக்திவேல்(20), திருவண்ணாமலை கோவிந்தன், நடுப்பட்டி பழனிச்சாமி(25), குறிஞ்சி குன்றம் ராமன், தனபால்(25) ஆகிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து சந்தன மர துண்டுகளும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.