இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்கு தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தனது ஒரு மாத சம்பளத்தை நிதியாக வழங்கியுள்ளார்.
இலங்கையில் ராணுவத் தாக்குதலுக்குள்ளான தமிழர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு நிவாரண நிதி திரட்டி வருகிறது. உணவுப் பொருட்கள், உடைகள் என உதவ விரும்புபவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களிடம் வழங்கி உரிய ரசீதை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அறிவித்துள்ள இந்த நிவாரண நிதிக்கு அரசியல் கட்சியினர், திரைப்படத் துறையினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் நிதிகளை வாரி வழங்கி வருகிறார்கள். இதுவரை ரூ.4 கோடியே 88 லட்சத்திற்கும் மேல் நிதி குவிந்துள்ளது.
இந்நிலையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கு உதவிட தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தனது ஒரு மாத சம்பளத்தை நிதியாக வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தியில், "இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு எனது ஒரு மாத சம்பளத்தை வழங்குகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.