இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவியாக ரூ.2.25 லட்சம் மதிப்புள்ள 10 டன் அரிசியை திருச்சி மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்களும், வர்த்தகர்களும் தமிழக அரசின் இலங்கைத் தமிழர் நிவாரண நிதி திரட்டும் திட்டத்திற்குக் கொடுத்துள்ளனர்.
திருச்சியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்த நிவாரணம் மாநிலப் போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேருவிடம் வழங்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் டி.சவுந்தியா, இதுவரை திருச்சி மாவட்டத்தில் இருந்து இலங்கைத் தமிழர் நிவாரண நிதியாக ரூ.11 லட்சம் திரட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.