Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர்கள் உண்ணாவிரதம்: ரஜினி, விஜயகாந்த் பங்கேற்பு!

Advertiesment
நடிகர்கள் உண்ணாவிரதம்: ரஜினி, விஜயகாந்த் பங்கேற்பு!
, சனி, 1 நவம்பர் 2008 (16:17 IST)
இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் இன்று காலை துவங்கிய பிரம்மாண்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இன்று காலை 8 மணிக்கு போராட்டம் துவக்கப்பட்டது. ராதாரவி உண்ணாவிரதப் போராட்ட நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். இதில் நடிகர்கள் விஜய், அஜீத், விக்ரம், நடிகை நயன்தாரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் காலை 8.30 மணியளவிலேயே உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகியோர் சுமார் 11.15 மணியளவில் போராட்டத்திற்கு வந்தனர். மேலும் நடிகர்கள் பிரபு, கார்த்திக், சிவக்குமார், சூர்யா, அர்ஜுன், ஜெயம் ரவி, பரத், வடிவேலு, விவேக், சிபிராஜ், மணிவண்ணன், பாண்டியராஜன், ஆகியோரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil