இலங்கையில் அந்நாட்டு ராணுவத்தினரால் தாக்குதலுக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
ஒருசில சிறிய கடைகள் திறந்திருந்தன. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தக் கோரி இந்த போராட்டம் நடைபெறுகிறது.
சென்னை உட்பட மாநிலத்தின் முக்கிய நகரங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
சென்னை டவுட்டனில் இன்று காலை திறந்திருந்த சில கடைகளை அடைக்க வற்புறுத்தியதாகக் கூறி வணிகர்கள் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால், முக்கிய வீதிகளிலும், மார்க்கெட் பகுதியிலும் மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடிக் கிடந்ததைக் காண முடிந்தது.